Cinema
கட்டிலில் கட்டிப்புரண்டு ரொமான்ஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ்; யாருடன் தெரியுமா?? வெளியான ஷாக் புகைப்படங்கள்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர்.
இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.
தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடித்துள்ளார். அதில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றதால் சீக்கிரமாகவே விஜய் மற்றும் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார்.
இந்த படம் தோல்வியைசந்தித்தாலும் , இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக இவர் நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.
சர்க்கார் படத்தில் விஜய்யுடனும், அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பழம்பெரும் நடிகை சாவித்ரிவின் வாழ்கை வரலாறு படமான ‘மகாநடி’ படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றவர்.
இந்த திரைப்படம் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
சமீப காலமாக கீர்த்தி சுரேஷ், தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக இவர் நடித்த சர்காரு வாரி பட்டா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம், தமிழில் மாமன்னன் படம் உள்ளது.
இது தவிர தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா, சிரஞ்சீவியுடன் போலோ ஷங்கர் உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு தயாரிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில், தன்னுடைய ஆண் நண்பர் என்று கூறிக்கொண்டு தன்னுடைய வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அந்த அந்த நாயாக நாங்கள் இருக்கக் கூடாதா என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
