Cinema
கீர்த்தி சுரேஷை விட அழகில் மிளிரும் அவரது அக்கா, அம்மா, பாட்டி; புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
2000-களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இவர்.
2013 -ம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பிறகு கோலிவுட் சினிமாவில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2, பென்குயின் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த சாணி காயிதம் படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து சர்க்காரு வாரி பாட்டா படம் தெலுங்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் மலையாளம், தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
கீர்த்தி சுரேஷுக்கு முகபாவனை குழந்தை மாதிரி இருப்பதால் அனைவரையும் வெகுவாக கவர்கிறார் என்ற ஒரு கருத்தும் மக்கள் மத்தியில் இருக்கிறது.
இவரைப் போலவே அவரது குடும்பமும் நல்ல க்யூட்டாக பப்ளிமாஸ் போன்ற முக அமைப்பு உள்ளார்கள் அவரது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
அச்சு அசல் கீர்த்தி சுரேஷ் போலவே அவரது அம்மாவும் அவரது பாட்டியும் இருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
