Cinema
“என் முதல் குழந்தை அம்மா தான்” -அம்மாவின் கால் நகத்தினை வெட்டும் நடிகை குஷ்பு; வைரலாகும் புகைப்படம்..!
இந்திய சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரியாக இருப்பவர் நடிகை குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் முதல் முதலில் கோவில் கட்டினர்.
ஏராளமான ரசிகர் பட்டாளத்தை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார்.
குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் வெள்ளித்திரை வாய்ப்புகள் குறைந்தாலும், சின்னத்திரையில் ஹீரோயின் அவதாரம் எடுத்து நடித்தார். மேலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட, இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த (Rajinikanth) ‘அண்ணாத்த’ (Annaatthe) திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
குஷ்பு சிறிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருந்தாலும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் குஷ்பு – மீனா (Meena) என இருவரையும் தலைவரோடு சேர்த்து பார்க்கும் பாக்கியம் ரசிகர்களுக்கு கிட்டியது.
எந்த அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ அந்த அளவிற்கு சினிமாவில் இருந்து விலகினார்.
திரைப்படங்கள் மட்டும் இன்றி அரசியலிலும் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.
தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு.
இப்படி சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்
தற்போது நடிகை குஷ்பு தனது அம்மாவின் காலை மடியில் வைத்து அவருக்கு நகங்களை வெட்டியுள்ளார்.இதனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தாயை குழந்தை போல பார்த்துக்கொள்ளும் நடிகை குஷ்புவை ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.
மேலும், இதுபோல ஒவ்வொருவரும் தங்களது தாயை பார்த்துக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
