Connect with us

    “வாழ்க்கை அழகானது; அதை அழகாக மாற்றியது நீதான் என் புருஷா” – சீரியல் நடிகை மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படம்..!

    Actress Mahalakshmi

    Cinema

    “வாழ்க்கை அழகானது; அதை அழகாக மாற்றியது நீதான் என் புருஷா” – சீரியல் நடிகை மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படம்..!

    சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

    Mahalakshmi

    இவர்களது திருமணம் திருப்பதியில் ரகசியமாக நடந்தேறியது.

    இவர்களது திருமண புகைப்படம் தற்போது வெளியாகிய நிலையில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் நடிகை மகாலட்சுமி.

    ‘அரசி’ சீரியல் மூலம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றார்.

    தொடர்ந்து அடுத்தடுத்து பல சீரியல்களில், நடித்து சிறந்த நடிகை என பெயர் எடுத்தவர்.

    மகாலட்சுமிக்கு ஏற்கனவே அனில் என்பவருடன் திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

    அனிலிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

    தற்போது இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    இத்தகவல் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும், மகாலட்சுமியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

    நடிகை மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    இந்த நிலையில் ரவீந்திரனோடு தான் திருமணம் செய்த செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்

    தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் இரண்டாவது திருமணம் என்பது குறிபிடத்தக்கது.

    இவர் தமிழில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ், கல்யாணம் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

    அதே போல், சில படங்களை விநியோகம் செய்து வருவது மட்டும் இன்றி, நடிகராகவும் உள்ளார்.

    தற்போது கழுத்தில் தாடியுடன் இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள மகாலட்சுமி, “வாழ்க்கை அழகானது, அதை அழகாக மாற்றியது நீதான் என் புருஷா” என பதிவிட்டுள்ளார்.

    Actress Mahalakshmi

    தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    https://www.instagram.com/p/Ch_jLyzro5q/?igshid=YmMyMTA2M2Y=

    Continue Reading
    To Top
    error: Content is protected !!