Connect with us

    ஜனாதிபதி கையால் விருது வாங்கிய தமிழ் சினிமா நடிகையின் தற்போதைய பரிதாப நிலை; அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

    Actress marikkannu

    Cinema

    ஜனாதிபதி கையால் விருது வாங்கிய தமிழ் சினிமா நடிகையின் தற்போதைய பரிதாப நிலை; அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

    ஜனாதிபதி கையால் சிறந்த நடிகை என்ற விருது வாங்கிய ஒரு சிறந்த தமிழ் நடிகை மாரிக்கண்ணு (Marikkannu) இன்று தெருவோரத்தில் அனாதையாக இருப்பது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Actress marikkannu

    தமிழ் சினிமாவில் 90’களில் கொடிகட்டி பறந்த நடிகைகள் பலர் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளனர்.

    அந்த வகையில் வள்ளி திருமணம் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக நடித்தவர் மாரிக்கண்ணு.

    நாடகத்தில் நடித்து புகழ் பெற்ற பின் சினிமா உலகில் நுழைந்தவர்கள் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல்.

    அந்த வரிசையில் நாடகத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மாரிக்கண்ணு.

    இவர் வள்ளி திருமணம், திருவிளையாடல் போன்ற பல வரலாற்று கதைகளில் நடித்து இருக்கிறார்.

    இவருடைய நடிப்பை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருவார்களாம்.

    அந்த அளவிற்கு இவருடைய நடிப்பினை பார்க்க மக்கள் ஆசைப்படுவார்களாம்.

    சிறந்த நடிப்பிற்காக அப்போதிருந்த ஜனாதிபதி இவருக்கு சிறந்த நடிகை என்ற விருதும் தந்திருக்கிறார்.

    இதன் பின் இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார். பின் இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு பெண் குழந்தை பிறந்தது.

    இப்படி சந்தோஷமாக வாழ்ந்து வந்த நடிகை மாரிக்கண்ணு தற்போது ரோட்டில் அனாதையாக ஆதரவு இன்றி வாழ்ந்து வருகிறார்.

    இதுகுறித்து அந்த ஊர் மக்கள் கூறியதாவது, இந்த அம்மாவை பார்ப்பதற்கு யாரும் வருவதில்லை.

    இவர்கள் இப்படித்தான் ரொம்ப காலமாக இங்கு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    அவருக்கு எப்போ சாப்பிட தோணுகிறதோ அப்ப சாப்பிடுவார், தூங்குவார், கோயில்களின் திண்ணைகளில் அமர்ந்து இருப்பார்.

    மனநிலை சரியில்லை என்றாலும் யாருக்கும் எந்தவித தொந்தரவும் கொடுக்க மாட்டார் என்று கூறியிருந்தனர்.

    ஜனாதிபதி கையில் விருது வாங்கிய நடிகை ரோட்டில் வசித்து வருவது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!