Connect with us

    நடிகை மீனாவின் கணவர் உடல்நல பாதிப்பால் சற்று முன் காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்..!

    Actress meena family

    Cinema

    நடிகை மீனாவின் கணவர் உடல்நல பாதிப்பால் சற்று முன் காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்..!

    நடிகை மீனாவின் கணவர் திடீரென உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Actress meena family

    நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனா.

    பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், பின்னர் அவர் ஹீரோயின் ஆனார். .

    நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய காந்த், பிரபு முதல் அஜித், விஜய் வரை முன்னணி நாயகர்களுடன் உடன் ஜோடி சேர்ந்து நடித்த மீனா, 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.

    நுரையீரல் செயலழிந்த நிலையில் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

    நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம்.

    நுரையீரல் பிரச்சனையுடன் கொரோனா பாதிப்பும் இருந்ததால் அவரை காப்பாற்ற மருத்துவர்களால் முடியவில்லை என்று கூறப்படுகிறது.

    நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர் வித்யாசாகர். நடிகை மீனா – வித்யா சாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!