Cinema
ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த நடிகை நமீதா; குவியும் பாராட்டுக்கள்..!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட திரையுலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நமீதா.
17 வயதில் மாடல் உலகில் நுழைந்த நமீதா, பின்னர் திரைத்துறையில் புகுந்து கவர்ச்சியின் மூலம் உச்சத்துக்கு சென்றார்.
2002ஆம் ஆண்டு ‘சொந்தம்’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை நமீதா.
அதன்பிறகு ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி என பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதையடுத்து தமிழில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நமீதா.
அதன்பிறகு ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார்.
எரிக் மேனிங் இயக்கிய ‘மாயா’ என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.
நடிப்பைக் கடந்து அரசியலிலும் பிஸியாக இருக்கிறார்.
பா.ஜ.கவில் இணைந்த அவர், அந்தக் கட்சிக்காக கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அண்மையில் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் இந்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் நாங்கள் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மருத்துவர்களுக்கு நன்றி
எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. உங்கள் ஆசியும், அன்பும் அந்த குழந்தைகளுக்கு வேண்டும் என்று நம்புகிறோம்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரெலா மருத்துவமனையில் எனக்கு குழந்தை பிறந்தது.
சிறந்த சுகாதார பராமரிப்பு மற்றும் சேவைகளுக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்.
எனது கர்ப்பகால பயணத்தில் என்னை வழிநடத்தி என் குழந்தைகளை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்காக உதவி செய்த டாக்டர் புவனேஸ்வரி மற்றும் அவரது குழுவினருக்கு உண்மையிலேயே நான் கடமைப்பட்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.
