Connect with us

    41 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை நமீதா; குவியும் வாழ்த்துக்கள்..!

    Namitha pregnant

    Cinema

    41 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை நமீதா; குவியும் வாழ்த்துக்கள்..!

    Namitha pregnantநடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா.

     

    தமிழில் அஜித், விஜய், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    நடிகை நமீதா தனது கவர்ச்சி நடிப்பால் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஆக்கினார். இந்நிலையில் நமீதாவிற்கான பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.

    இதையடுத்து விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர் தனது காதலர் வீரேந்திராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

    இந்த நிலையில் 41 வயது நிறைந்த நமீதா தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    நேற்று பிறந்த நாளைக் கொண்டாடிய நமீதா, தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டகிராமில் தெரிவித்து புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

    தாய்மை. புதிய அத்தியாயம் தொடங்கியதும் நான் மாறினேன். பிரகாசமான மஞ்சள் சூரியன் என்மீது பிரகாசித்தபோது புதிய வாழ்க்கை என்னை அழைத்தது.

    நான் விரும்பியதெல்லாம் நீ தான். உனக்காகத்தான் இவ்வளவு நாள் வேண்டினேன்.

    உன்னுடைய மென்மையான உதைகளை என்னால் உணர முடிகிறது என்று தாய்மை பற்றிய தனது உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

    அதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!