Cinema
நடிகை நமீதாவா இது? குழந்தை பெற்ற பிறகு எப்படி மாறிட்டாங்க; ஷாக் புகைப் படம்👇👇👇
ஹாய் மச்சான்ஸ் என செல்லமாக ரசிகர்களை அழைத்து தமிழ் மக்களை கவர்ந்த ஒரு நடிகை நமீதா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட திரையுலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நமீதா.
17 வயதில் மாடல் உலகில் நுழைந்த நமீதா, பின்னர் திரைத்துறையில் புகுந்து கவர்ச்சியின் மூலம் உச்சத்துக்கு சென்றார்.
2002ஆம் ஆண்டு ‘சொந்தம்’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை நமீதா.
அதன்பிறகு ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி என பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதையடுத்து தமிழில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நமீதா.
அதன்பிறகு ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார்.
எரிக் மேனிங் இயக்கிய ‘மாயா’ என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்
அதன்பிறகு தொடர்ந்து படங்கள் நடித்துவந்த நமீதா நடிப்பில் கடைசியாக மியா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
இடையில் பிக்பாஸ் 1ல் போட்டியாளராகவும், மானாட மயிலாட, டேன்ஸ் ஜோடி டேன்ஸ் என்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தார்.
குழந்தைகள் நமீதா தொழிலதிபர் வீரேந்திர சௌத்ரி என்பவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
தனது 41வது பிறந்தநாள் ஸ்பெஷலாக நமீதா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியிட அண்மையில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இப்போது பிரசவத்திற்கு பிறகு நடிகை நமீதா தனது குழந்தையுடன் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் கொழு கொழு என இருந்த நம்ம நடிகை நமீதாவா இது என புலம்புகின்றனர்.
