Connect with us

    நாய் திருட்டு போனதால் கதறி அழுத நடிகை; மனமிரங்கி திருடிய நாயை கொண்டு வந்து விட்ட திருடன்..!!

    Actress nirusha

    Viral News

    நாய் திருட்டு போனதால் கதறி அழுத நடிகை; மனமிரங்கி திருடிய நாயை கொண்டு வந்து விட்ட திருடன்..!!

    பெங்களூரில் நடிகை கதறி அழுததை பார்த்து, திருடிய நாயை திருப்பி கொண்டு வந்த திருடன் செய்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Actress nirusha

    பெங்களூரு நாகரபாவி பகுதியில் வசித்து வருபவர் நிருஷா. இவர் கன்னட சின்னத்திரை நடிகை ஆவார்.

    இந்த நிலையில் நிருஷா ஒரு பெண் நாயை வளர்த்தார். அந்த நாய்க்கு டிம்பிள் என்றும் பெயர் சூட்டி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு நிருஷாவின் வீட்டின் முன்பு நாய் நின்று கொண்டு இருந்தது.

    அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் சேர்ந்து அந்த நாயை திருடிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

    இந்த நிலையில் நாய் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிருஷா வீட்டின் முன்பு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் நாயை, இளம்பெண் மற்றும் வாலிபர் திருடி செல்லும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

    இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நிருஷாவும், அவரது அம்மாவும் போலீசில் புகார் அளித்தனர்.

    ஆனால் எந்த பயனும் இல்லை. இதனால் மனம் நொந்து போன நிருஷா சாப்பிடாமல், தூங்காமல் டிவிங்கிளின் நினைவாகவே இருந்தார்.

    இதனையடுத்து தனது தோழிகள்கொடுத்த அறிவுரையின் படி, இன்ஸ்டாவில் கதறி அழுது பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    அதில் டிவிங்கிள் எனது மகள் போன்றவள். அவள் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

    யார் எடுத்திருந்தாலும் தயவு செய்து கொடுத்து விடுங்கள்’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    Dog

    இது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.

    இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நாயை தூக்கிச்சென்ற திருடனும் பார்த்திருக்கிறார்.

    நிருஷா அழுததை பார்த்து மனமுருகிய திருடன், நேற்று நிருஷா வீட்டின் அருகிலுள்ள கோயில் முன்பு, திருடப்பட்ட நாயை விட்டு சென்று, நிருஷா அம்மாவை போனில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்து இருக்கிறார்.

    இதனையடுத்து நிருஷா அம்மாவும், நிருஷாவும் ஓடிச்சென்று நாயை வீட்டிற்கு தூக்கிச் சென்றனர்.

    நாய் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்த அவர், ஒரு வீடியோவை வெளியிட்டு நன்றி தெரிவித்தார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!