Cinema
“நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசை” -நடிகை பிரியா ஆனந்த் பேட்டி..!
பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், மோசடி என்று இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது சில சீடர்களுடன் தலைமறைவானவர் சாமியார் நித்தியானந்தா.
கோயில் கட்ட நிதி என்று கூறியும் தன்னை நம்பிவந்தவர்களிடம் சித்துவேலைகளை காட்டி மோசடி செய்தும், அடித்துச் சென்ற பணத்தில் தனித் தீவு ஒன்றை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, கைலாசா என்ற நாட்டை அறிவித்தார்.
இந்தியாவில் இருந்து ஆட்டைய போட்டுச்சென்ற ஆயிரம் கோடி அளவிலான பணத்தை தங்க கட்டிகளாக்கி வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருந்த துணிச்சலில் இந்திய அரசுக்கே சவால் விட்டு தப்பித்து வந்தார்.
கைலாசாவில் இருந்து தினம் தோறும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
நித்தியானந்தா.
நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது நித்தியானந்தா குறித்து பேசி உள்ளார் நடிகை பிரியா ஆனந்த்.
அதாவது நித்யானந்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அவரை திருமணம் செய்தால் என்னுடைய பெயரை மாற்ற வேண்டிய அவசியம் கூட இல்லை.
அவரை இத்தனை பேர் பின் தொடர்கிறார்கள் என்றால் நிச்சயமாக அவரிடம் ஏதோ இருக்கு என்பது தானே அர்த்தம் என பேசி உள்ளார்.
ப்ரியா ஆனந்த் சாமியார் நித்தியானந்தா குறித்து இவ்வாறு பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
