Connect with us

    “என் கணவர் எப்போதும் கோபப்படவே மாட்டார்; நான் என்ன செய்தாலும், எதையும் கண்டுக்கவும் மாட்டார்” -நடிகை ரஞ்சிதா..!

    Nithyananda ranjitha

    Cinema

    “என் கணவர் எப்போதும் கோபப்படவே மாட்டார்; நான் என்ன செய்தாலும், எதையும் கண்டுக்கவும் மாட்டார்” -நடிகை ரஞ்சிதா..!

    என் கணவர் எதையும் கண்டுகொள்ள மாட்டார், கோபப்பட மாட்டார் என நித்யானந்தா சிஷ்யையும் நடிகையுமான ரஞ்சிதா கடந்த ஆண்டு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

    Nithyananda ranjitha

    தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரஞ்சிதா.

    மாநிறமாக இருந்தாலும் நம்ம பக்கத்துவீட்டு பெண் போல் இருப்பதால் அவருக்கு பல ரசிகர்கள் இருந்தனர்.

    இந்த நிலையில் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்ட ரஞ்சிதா, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் அவரது சிஷ்யையாக சேர்ந்தார்.

    அங்கு நித்யானந்தாவை தனது குருவாக எண்ணி பூஜித்தார்.

    திடீரென அவரும் நித்யானந்தாவும் ஒரு மெத்தையில் இருந்த வீடியோ வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்துடன் நித்யானந்தாவை விட்டு ரஞ்சிதா விலகியிருப்பார் என கருதினால் அவர் இன்றுவரை நித்தி கூடவே நிழலாக இருக்கிறாராம்.

    நித்தி சொல்லும் கைலாசாவில் ரஞ்சிதாவும் உடனிருந்து கவனித்து கொள்கிறாராம்.

    இந்த நிலையில் ரஞ்சிதா கடந்த ஆண்டு குமுதம் நாளிதழுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

    அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

    நான் எப்படியோ, எனக்கு அப்படியே மாறுபட்டவர் தான் என்னுடைய கணவர். அதிகம் பேசமாட்டார், ரொம்ப பேலன்ஸ்ட் ஆக இருப்பார்.

    நான் வாழ்க்கையில் பார்த்த ஒரு நடுநிலையான மனிதர் என்றால் என் கணவர் தான் என்று கூறுவேன்.

    அவருக்கு நான் எந்த டென்ஷன் அளித்தாலும், வெளியாட்கள் அவருக்கு டென்ஷன் கொடுத்தாலும், அவர் ஒரே நிலையாக தான் இருப்பார் வெளிகாட்டிக்கொள்ள மாட்டார்.

    நிறைய முறை அவரிடம் கேட்டுள்ளேன் இவ்வளவு நடந்திருக்கே நீ எதுவும் பீல் பண்ணமாட்டியா என்று கேட்பேன்.

    எது நடக்குமோ, அது நடக்கும் அத நெனச்சு பீல் பண்ணி என்ன பண்ண போறேன் என என்னிடம் கூறுவார்.

    ஆபிசில் எது நடந்தாலும் அதை வெளிக்காட்டமாட்டார்.

    நான் நிறைய பேரை பார்த்திருக்கேன், ஆபீஸ் பிரச்சனைகளை வீட்டில் காட்டுவார்கள், சண்டை போடுவார்கள்.

    அது மாதிரி எந்த விஷயத்தையும் என் கணவர் செய்ய செய்யமாட்டார்.

    16 வருடங்கள் அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை
    மனரீதியாக அவர் வலிமைமிக்கவர்.

    அவரை பார்த்து நான் நிறைய கற்றுக்கொள்ள விருப்பப்படுவேன்.

    நான் பல இடங்களில் உணர்ச்சிவசப்பட்டுளேன், என்னை எங்க போற , என்ன பண்ற என அணுவளவு கூட கேக்கமாட்டாரு.

    உங்களுக்கு எது பிடிக்குதோ அதை செய்யுங்கள், அது உங்களை மாற்றும் என்று அந்த பேட்டியில் அவர் கூறினார்.

    நித்யானந்தாவின் உடல்நிலை பற்றிய வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த பேட்டியும் மிகவும் வைரலாகி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!