Cinema
90 களில் கலக்கிய நடிகை சங்கவியா இது! ஆளே மாறிப் போய் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.! வைரலாகும் லேட்டஸ்ட் குடும்ப போட்டோ..!
1975 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தவர் நடிகை சங்கவி. இவரின் உண்மையான பெயர் காவியா ரமேஷ்.
இவர் தமிழில் அஜித்தின் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
விஜயுடன் ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என தொடர்ந்து 4 திரைப்படங்களில் நடித்தார்.
அதுமட்டுமில்லாமல் ராம்கி, பிரசாந்த், விஜய், சத்திய, ரஜினி, கமல், தனுஷ், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.
90 கால கட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.
இந்நிலையில், 2016-ல் தான் ஐடி துறையில் பணியாற்றும் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சங்கவிக்கு 2020ல் தான் பெண் குழந்தை பிறந்தது.
அப்போது அவருக்கு வயது 42. அந்த வயதில் அவர் குழந்தை பெற்றதை ரசிகர்கள் அந்த நேரத்தில் ஆச்சர்யமாக பேசினார்கள்.
தற்போது சங்கவி தனது இரண்டு வயது குழந்தை உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் பெற்று வருகிறது.
