Cinema
ஆதரவற்ற முதியோர் இல்லம் சென்று உணவு வழங்கி மகிழ்ந்த வெந்து தணிந்தது காடு பட ஹீரோயின்..!
சிம்பு நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற படம் ‛வெந்து தணிந்தது காடு’.
இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சிம்பு கதாநாயகனாக ‘முத்து’ எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்தார்.
தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே “வெந்து தணிந்தது காடு” படமாகும்.
இந்த படத்தில் பாவை எனும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் சித்தி இத்னானி.
இவருடைய அழகான சிரிப்புக்கும், நடிப்புக்கும் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
இவர் அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்திலும், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 100 கோடி வானவில் படத்திலும் நடித்து வருகிறார்.
சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் வெந்து தணிந்தது காடு.
அனைவரிடமும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட நடிகை சித்தி இத்னானி, சமீபத்தில் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் அன்பாக பேசி மகிழ்ந்து இருக்கிறார்.
மேலும் அவர்களுக்கு தேவையான உணவு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.
சித்தி இத்னானி இந்த செயலை பாராட்டிய முதியோர்கள், அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.
