Connect with us

    நடிகை வனிதா விஜயகுமார் கர்ப்பமா..? – வைரலாகும் புகைப்படம்; ஷாக்கான ரசிகர்கள்..!

    Actress vanitha vijayakumar

    Cinema

    நடிகை வனிதா விஜயகுமார் கர்ப்பமா..? – வைரலாகும் புகைப்படம்; ஷாக்கான ரசிகர்கள்..!

    தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் வனிதா விஜயகுமார்.

    Actress Vanitha Vijayakumar

    பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக சில படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார்.

    ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைத் தேடிக் கொடுத்தது.

    ஏற்கனவே 2 திருமணம், ஒரு காதல் ஆகியவற்றை கடந்து வந்த வனிதா பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    ஆனால் ஓரிரு மாதங்களிலேயே இந்த திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.

    இதனையடுத்து வனிதா பழையபடி தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்

    பீட்டர் பாலை விட்டு பிரிந்த பின்னர் வனிதா, படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர்

    தற்போது 2கே காதல், காத்து, அநீதி, அந்தகன், ரஜினி, பிக்கப் டிராப் என பல படங்களில் நடித்து வருகிறார்.

    இதுதவிர யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

    மேலும் வனிதா கடந்தாண்டு அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை தொடங்கியிருந்தார்.

    தற்போது ஃபேஷன் டிசைனராகவும் வனிதா அவதாரம் எடுத்துள்ளார்.

    இந்நிலையில், ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படத்தின் போஸ்ட்ர் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    Vanitha

    அந்த போஸ்டரில் நடிகை வனிதா கர்ப்பமாக காட்சி அளிக்கிறார். அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!