Connect with us

    “ஆதார் கார்டை காட்டுங்க; குவாட்டரை கொண்டு போங்க” – திருமணத்திற்கு வந்தவர்களுக்கு குவாட்டர் வழங்கிய திருமண வீட்டார்..!!

    Youth supply liquor at marriage function

    Viral News

    “ஆதார் கார்டை காட்டுங்க; குவாட்டரை கொண்டு போங்க” – திருமணத்திற்கு வந்தவர்களுக்கு குவாட்டர் வழங்கிய திருமண வீட்டார்..!!

    சிவகங்கை அருகே திருமணத்திற்கு வருபவர்களுக்கு குவாட்டரும் சிக்கனும் கொடுப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்தது மட்டும் அல்லாமல் சொன்னபடி திருமணம் ஆனவர்களுக்கு 1 குவாட்டர், ஆகாதவர்களுக்கு 2 குவாட்டர் கொடுத்த ருசிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

    Youth supply liquor at marriage function

    சிவகங்கை அருகே கீழகண்டனி கிராமத்தில் ஜெயமுத்து ,சரண்யா, ஆகியோர் திருமண வரவேற்பு பிளக்ஸ் போர்டில் திருமணத்திற்கு வருபவர்களுக்கு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்று பிளக்ஸ் போர்டு வைத்து இருந்தனர்.

    அதில் சில நிபந்தனைகளும் போடப்பட்டுள்ளது. அதில் திருமணம் ஆனவர்கள் என்றால் ஒரு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு இரண்டு குவாட்டரும் சிக்கனும் இலவசமாக கொடுக்கப்படும் என்றும் அதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

    ஆதார் கார்டை வாங்கி பார்த்து விதிமுறை படி குவாட்டர்களை கொடுத்து விருந்தினர்களை குஷி படுத்தியுள்ளனர்.

    மேலும் குவாட்டர் (மது) வேண்டாம் சொல்லுபவர்களுக்கு பீர் கொடுத்து உள்ளனர் .

    இவர்களது வித்தியாசமான முயற்சி குடிமகன்களை குஷிபடுத்தினாலும், குடும்பத்துடன் வந்தவர்கள் மொய் செய்து, ஏக்கத்துடன் சென்றனர்.

    இது கூறித்து இளைஞர்கள் கூறுகையில்,

    தற்போது திருமணம் உட்பட எந்த விழா, என்றாலும் மது இல்லாமல் இல்லை என்று ஆகிவிட்டது.

    திருமணத்திற்கு வருபவர்கள் எப்படியும் மது அருந்துபவர்களும் வருவார்கள். எப்படியும் சாப்பிடுவதற்கு முன்னால் மது குடிக்க வேண்டும் தோன்றும்.

    மதுக்காக சிவகங்கை, மானாமதுரை போய் மது வாங்க வேண்டும்.

    அதனால் தான் நாங்களே இலவசமாக மது அருந்துபவர்களுக்கு மட்டும், குறிப்பாக 35 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது கொடுத்து உள்ளோம் என கூறினர்.

    இந்த சம்பவம் வைரலான நிலையில், இது மது குடிப்பதை ஊக்கப்படுத்துவது போல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!