Connect with us

    காதலியின் அம்மாவுக்கு கிட்னியை தானம் செய்த இளைஞர்; ஆனால், காதலி வேறு ஒருவரை மணந்ததால், இளைஞர் கதறி அழுத சோகம்..!!

    World News

    காதலியின் அம்மாவுக்கு கிட்னியை தானம் செய்த இளைஞர்; ஆனால், காதலி வேறு ஒருவரை மணந்ததால், இளைஞர் கதறி அழுத சோகம்..!!

    தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக தனது காதலியின் தாய்க்கு இளைஞர் ஒருவர் தனது கிட்னியை தானம் செய்துள்ளார்.

    ஆனால், அவரது காதலியோ அவரை ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

    அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக உயிருக்குயிராக பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

    டிக் டாக் மூலம் முதலில் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

    இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென காதலியின் தாயாருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது.

    இதனை அடுத்து தனது வருங்கால மாமியாருக்கு தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்துள்ளார் அந்த இளைஞர்.

    தனது அம்மாவுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து உயிரை காப்பாற்றியுள்ளாரே என்ற நன்றி கூட இல்லாமல் அந்தப் பெண் திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியர் டிக்டாக்கில் அழுது கொண்டே வீடியோ வெளியிட்டு புலம்பியுள்ளார்.

    அந்த வீடியோவில் நான் கனவிலும் இவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், தனது காதலியின் அம்மாவுக்காக கிட்னியை கொடுத்தும், அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்து உள்ளதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து கருத்து தெரிவித்த அந்த இளைஞர், இந்த வீடியோ இத்தனை பேர் பார்க்கும் வகையில் பிரபலமடையும் என நான் எதிர்பார்க்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.

    வழக்கம்போல இந்த வீடியோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!