Tamil News
மகளை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவருக்கு ஒரு பெண்ணால் நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம் 😳😳👇👇
கடலூர் அருகே குறவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவமணி (37).
இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் சத்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு சிவமணிக்கு செல்போனில் அழைப்பு வந்ததும், வீட்டை விட்டு கிளம்பியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிய சத்யா தனக்கு தெரிந்த இடங்களில் சென்று விசாரித்துள்ளார்.
ஆனால் எங்குமே தனது கணவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்று காலை சிவமணி எஸ்.புதூர்-ராமாபுரம் வாழைத்தோப்பில் சருகில் பிணமாக கிடந்தார்.
அந்த வழியாக சென்ற சில விவசாயிகள், கழுத்தறுந்து கிடந்த பிணத்தை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கடைசியாக சிவமணியிடம் செல்போனில் பேசியது ஒரு பெண் என தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சாராய வியாபாரி பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர்.
விசாரணையில், சாராயம் விற்கும் பெண் வனிதாவிற்கும் ஆட்டோ ஓட்டுநர் சிவமணிக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருப்பதும் தெரியவந்தது.
நாளடைவில் வனிதாவின் மகளை சிவமணி ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வனிதா, சிவமணியை தனது கூட்டாளிகளின் உதவியோடு கொலை செய்து, உடலை வீசி விட்டு சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
