Connect with us

    “அடேங்கப்பா! 222 டன் தங்கமா” -எறும்புகளால் கண்டுபிடிக்கப்பட்ட தங்க சுரங்கம்; வியப்பின் உச்சியில் மக்கள்..!

    Ants Gold farm

    Viral News

    “அடேங்கப்பா! 222 டன் தங்கமா” -எறும்புகளால் கண்டுபிடிக்கப்பட்ட தங்க சுரங்கம்; வியப்பின் உச்சியில் மக்கள்..!

    பீகாரில் 222 டன் தங்க சுரங்கத்தை எறும்புகள் கண்டுபிடித்த சம்பவம் அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    Ants Gold farm

    தங்க சுரங்கம் என்றவுடன் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது கேஜிஎஃப்(KGF) தான்.

    கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வந்த கோலார் தங்க வயல் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான தங்க வயல்களில் ஒன்று.

    பல டன் தங்கம் இங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு கோலார் தங்க வயல் மூடப்பட்டது.

    அங்கு தங்கத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட செலவு அதிகம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்த தங்க சுரங்கத்தை மையமாக வைத்துதான் KGF என்ற படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்றைப் பெற்றது.

    இந்நிலையில், அதை விட பெரிய தங்க வயல் ஒன்று பீகார் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில் எறும்புகள் புற்று கட்டும் போது, அங்கு மண் துகள்கள் மின்னுவதை பார்த்து, அரசுக்கு தகவல் அளித்தனர்.

    அங்கு சென்று ஆய்வு நடத்திய கனிம வளத்துறை அங்கு தங்கச் சுரங்கம் இருப்பதை உறுதி செய்தது.

    இங்கு 37 ஆயிரத்து 600 கிலோ எடையுள்ள தங்க தாது உட்பட 222 மில்லியன் டன் தங்க வளம் புதைந்து கிடப்பதாக மத்திய சுரங்கத்துறை தெரிவித்துள்ளது.

    இது நாட்டின் மொத்த தங்க இருப்பில் 44 சதவீதம் என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, ஜமுய் மாவட்டத்தில் உள்ள தங்க வயலில் அகழாய்வு பணிகளை தொடங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக மத்திய புவியியல் ஆய்வு மற்றும் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் மாநில சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!