Connect with us

    தாய், தந்தை இறந்த நிலையில் கடந்த 3 மாதமாக பள்ளி சத்துணவை சாப்பிட்டு உயிர் வாழும் குழந்தைகள்; நெஞ்சை உருக்கும் சோகம்..!

    Arani children lost parents

    Tamil News

    தாய், தந்தை இறந்த நிலையில் கடந்த 3 மாதமாக பள்ளி சத்துணவை சாப்பிட்டு உயிர் வாழும் குழந்தைகள்; நெஞ்சை உருக்கும் சோகம்..!

    ஆரணி அடுத்த ஆவணியாபுரத்தில் பெற்றோரை இழந்து தங்கை மற்றும் தம்பியுடன் பள்ளி மதிய உணவை மட்டுமே சாப்பிட்டு வாழும் குழந்தைகளின் நிலை கண் கலங்க வைப்பதாக உள்ளது.

    Arani children lost parents

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆவணியாபுரத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்; டெய்லர். இவரது மனைவி வேண்டா.

    இவர்களது மகள்கள் கார்த்திகா, 15; நிறைமதி, 10; மகன் சிரஞ்சீவி, 14.

    அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கார்த்திகா, 10-ம் வகுப்பு, சிரஞ்சீவி ஒன்பதாம் வகுப்பு, நிறைமதி ஆறாம் வகுப்பு படிக்கின்றனர்.

    கடந்த நான்கு ஆண்டு களுக்கு முன் லோகநாதன் உடல்நிலை பாதிப்பால் இறந்தார்.

    புற்றுநோயால் ‍அவதிப்பட்ட தாய் வேண்டா, கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அவரும் இறந்தார்.

    பெற்றோரை இழந்த குழந்தைகள், இடிந்து விழும் நிலையில் உள்ள ஓட்டு வீட்டில் தனியாக, சாப்பாட்டுக்கு வழியின்றி தவிக்கின்றனர்.

    மதிய நேரத்தில், அரசு பள்ளியில் வழங்கும் சத்துணவை மட்டுமே சாப்பிட்டு வாழ்கின்றனர்.

    காலை, இரவில் உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர். ‘அவர்களது வீட்டை பராமரித்து, படிப்பு செலவை ஏற்க அரசு உதவ வேண்டும்’ என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!