Tamil News
கடன் தருவதாக கூறிய ராணுவ வீரருடன் உல்லாசம் அனுபவித்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்..!
மார்த்தாண்டம் அருகே பண உதவி செய்வதாக கூறி கல்லூரி மாணவியுடன் பழகி அவரை பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராணுவ வீரர் 3 மாதத்துக்குப்பின் கைது செய்யப்பட்டார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் ஓய்வு நேரங்களில் மாத ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.
அந்த ஏலச்சீட்டில் மாணவிக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் தோழிகள் மூலம் மேல்பாலை குழியோல்விளை பகுதியை சேர்ந்த சஜித் (30) என்பவரிடம் பணம் கடனாக கேட்டார்.
ராணுவ வீரரான சஜித், விடுமுறையில் ஊருக்கு வந்தார். பணம் தந்து உதவுவதாக கூறி மாணவியுடன் சஜித் பழக தொடங்கினார்.
அவ்வப்போது இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் பேசினார்.
தனது ஆசைப்படி நடந்து கொண்டால் பணம் கிடைக்கும் என கூறி மாணவியை ஆபாசமாக நிற்க வைத்து வீடியோ பதிவு செய்துள்ளார்.
பின்னர் இதை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டி மாணவியை தனிமையில் அழைத்து பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் சஜித் மற்றும் அவரது நண்பர்கள் ஜான் பிரிட்டோ (33), மற்றொரு ராணுவ வீரர் கிரீஷ் (29), விபின் ஜான் (32) ஆகிய 4 பேர் மீதும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் ஜான் பிரிட்டோ, விபின் ஜான் ஆகிய 2 பேரையும் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
ராணுவ வீரர்களான சஜித், கிரீஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.
அவர்களில் சஜித்தை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு ராணுவ வீரரான கிரீஷை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
