Tamil News
தர்மபுரி அருகே, பிளஸ் 2 மாணவியை கட்டாய திருமணம் செய்ததாக மணமகன் உட்பட 4 பேர் கைது…!!
தர்மபுரி அருகே, பிளஸ் 2 மாணவியை கட்டாய திருமணம் செய்ததாக மணமகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் சோளக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் முனியப்பன், வயது.23
இந்நிலையில் அந்த மாணவிக்கும் முனியப்பனுக்கும் கட்டாய திருமணம் நடந்ததாக சைல்டு லைன் அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக தருமபுரி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சரவணன் மற்றும் குழுவினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த நவ., 15ல் இந்த மாணவிக்கு கட்டாய திருமணம் நடந்துள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து, போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்ந்தனர்.
இதையடுத்து, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், முனியப்பன், 23, அவரது தாத்தா லட்சுமணன், 65, பாட்டி வசந்தா, 55, உறவினர் தர்மன், 27 ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
