Connect with us

    புது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..!!

    Eb servant got bribe

    Tamil News

    புது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..!!

    திருவெறும்பூர் அருகே வீட்டிற்கு புது மின் இணைப்பு வழங்க ரூபாய் 18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு மின்வாரிய ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

    Eb servant got bribe

    திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஆர்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர். நியாத் ஷகியா. இவர் மத்திய பொதுத்துறை  பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் திருச்சி நவல்பட்டு ஆர்.எஸ்.கே நகரில் புதிததாக வீடு கட்டி வருகிறார்.

    இந்த நிலையில், வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக, நவல்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

    அப்போது, வணிக பிரிவில் ஆய்வாளராக பணிபுரியும் விக்டர் என்பவர், மின் இணைப்பு வழங்க ரூ.18 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென கூறியுள்ளார்.

    லஞ்சம் தர விரும்பாத நியாத் ஷகியா, இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

    அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய 18 ஆயிரம் ரூபாய் பணத்தை நேற்று முன்தினம் நியாத் ஷகியாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர்.

    அந்த பணத்தை  கொடுப்பதற்கு விக்டரை இன்று காலை நியாத் ஷகியா தொடர்பு கொண்டுள்ளார்.

    அவர், நியாத் ஷகியாவை நவல்பட்டு மின்வாரிய அலுவலகம் வருமாறு கூறியுள்ளார்.

    அதனடிப்படையில் நியாத் ஷகியா நவல்பட்டு மின்சார வாரிய அலுவலகம் சென்று விக்டரை சந்த்து பணத்தை கொடுத்துள்ளார்.

    பணத்தை பெற்ற விக்டர் நியாத் ஷகியாவிடம் இருந்து வங்கி விட்டதாக செல்போனில் உதவி பொறியாளர் கமருதீனுக்கு தகவல் சொல்லிய போது மறைத்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக விக்டரை கைது செய்தனர்.

    அதன் அடிப்படையில் விக்டரிடம் நவல்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்ததில் மின்சார வாரிய உதவி பொறியாளர் கமருதீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக விக்டர் வாக்குமூலம் அளித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!