Connect with us

    “என்னங்க இப்படி பண்ணிட்டீங்க??” -முதலிரவு முடிந்து நள்ளிரவில் களைப்பில் அசந்து தூங்கிய மணப்பெண்; மணமகன் செய்த பகீர் காரியம்…!!

    Asarudin rasheed first night in kerala

    Viral News

    “என்னங்க இப்படி பண்ணிட்டீங்க??” -முதலிரவு முடிந்து நள்ளிரவில் களைப்பில் அசந்து தூங்கிய மணப்பெண்; மணமகன் செய்த பகீர் காரியம்…!!

    கேரளாவில் முதலிரவு (first night) நாளன்று நள்ளிரவில் மணமகன் செய்த செயல் மணமகள் வீட்டார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Asarudin rasheed first night in kerala

    கேரள மாநிலம் அடூர் காயங்குளம் பகுதியை சேர்ந்த அசாருதீன் ரஷீத்துக்கும் பழக்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இந்ரிலையில் மணமகள் வீட்டில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    திருமணம் முடிந்து இருவருக்கும் மணமகள் வீட்டில் விருந்து நடந்தது.

    அன்று இரவு அவர்களுக்கான முதலிரவும் மணமகள் வீட்டிலேயே நடைபெற்றுள்ளது.

    முதலிரவு முடிந்ததும் மறுநாள் அதிகாலை 3 மணியளவில் மணமகன் திடீரென வீட்டில் இருந்து புறப்படவே, அவரிடம் மணமகள் எங்கு செல்கிறீர்கள்? என கேட்டுள்ளார்.

    அதற்கு அசாருதீன் தனது நண்பன் விபத்தில் சிக்கி இருக்கிறான்.

    அவனுக்கு உதவ செல்கிறேன் என்று கூறவே, இதனை நம்பிய மணப்பெண்ணும் கணவரை அனுப்பி வைத்துள்ளார்.

    வீட்டில் இருந்து சென்ற அசாருதீன் மீண்டும் வீட்டிற்கு வராத நிலையில், போனில் தொடர்பு கொண்டும் பலனில்லை. அது ஸ்விட்ச் ஆப் என தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள் முதலிரவு அறைக்கு சென்று பார்த்த போது அங்கு மணமகள் அணிந்திருந்த 30 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    இதுபோல அறையில் இருந்த ரூ.2.75 லட்சம் பணத்தையும் காணவில்லை.

    இதனால் பதறி போன மணப்பெண்ணின் உறவினர்கள் அடூர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மாயமான மணமகன் அசாருதீன் ரஷீத்தை தேடினர்.

    இதில் அசாருதீன் ரஷீத் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் அவரது முதல் மனைவி ஆலப்புழாவை அடுத்த சேப்பாடு பகுதியில் இருப்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து ஆலப்புழா விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!