Connect with us

    18 வயது பெண்ணை மணக்க மாட்டேன் என உதறிவிட்டு 83 வயதான போலந்து நாட்டு பெண்ணை மணந்த 28 வயது ஆசிய இளைஞர்..! காரணம் என்ன தெரியுமா??

    World News

    18 வயது பெண்ணை மணக்க மாட்டேன் என உதறிவிட்டு 83 வயதான போலந்து நாட்டு பெண்ணை மணந்த 28 வயது ஆசிய இளைஞர்..! காரணம் என்ன தெரியுமா??

    பாகிஸ்தானை சேர்ந்த 28 வயதான இளைஞன், போலந்து நாட்டை சேர்ந்த 83 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    ஹபீஸ் முகமது நடீம் (28) என்ற இளைஞரும், ப்ரோமா (83) என்ற பெண்ணும் பேஸ்புக் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நட்பானார்கள்.

    இருவருக்கும் 55 வயது வித்தியாசம் உள்ள நிலையில் இந்த நட்பானது நாள் செல்ல செல்ல காதலாக மாறியது.

    இந்த ஆறு ஆண்டில் இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே சமூக வலைத்தளத்திலேயே காதலித்து வந்துள்ளனர்.

    இருவருக்குமே தங்களின் தாய் மொழி மட்டுமே தெரிந்த நிலையில் ஆங்கிலம் பேச தெரியாது.

    இதையடுத்து மொழிபெயர்ப்பு செயலி மூலமே இருவரும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு சாட் செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் முகமது – ப்ரோமா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி ப்ரோமா விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு வந்தார்.

    அங்கு இருவருக்கும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் அவர்களுக்கு திருமணம் நடந்தது.

    முகமதை மணப்பதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறிய ப்ரோமோ தனது பெயரை பாத்திமா என மாற்றி கொண்டார்.

    இந்த நிகழ்வின் போது பாத்திமா தனது கைகளில் மருதாணியுடன் பாரம்பரியத்துடன் பிரகாசமான சிவப்பு நிறத்தில் திருமண ஆடையை அணிந்திருந்தார்.

    மேலும் இஸ்லாமிய சட்டப்படி மனைவியாகும் மணப்பெண்ணுக்கு, மணமகன் கட்டயமாக ஒரு கட்டணத்தை பணமாக கொடுக்க வேண்டும், அதை பாத்திமாவுக்கு முகமது கொடுத்தார்.

    முகமது ஐந்து நாட்களுக்கு முன்னர் 18 வயதான உறவுக்கார பெண்ணை திருமணம் செய்யவிருந்தார்.

    ஆனால் அப்பெண்ணை மணக்க முடியாது என கூறிவிட்டு பாத்திமாவை மணந்து கொண்டுள்ளார்.
    அவர் கூறுகையில், என் மனைவியின் கூந்தல் அழகு, முகம் அழகு, கைகள் அழகு, கால்கள் அழகு. எல்லாமே அழகு.

    நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம் என கூறினார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!