Connect with us

    குடிபோதையில் தனது நண்பருக்கு தாலிகட்டி, முதலிரவு நடத்திய ஆட்டோ டிரைவர்; அதன்பின் நடந்த விபரீதம்…!!

    Auto driver got married with a guy

    Viral News

    குடிபோதையில் தனது நண்பருக்கு தாலிகட்டி, முதலிரவு நடத்திய ஆட்டோ டிரைவர்; அதன்பின் நடந்த விபரீதம்…!!

    Auto driver got married with a guy

    தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது இளைஞர்.

    இவருக்கு மெடெக் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஆட்டோ டிரைவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

    இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று அடிக்கடி மது அருந்துவது வழக்கம்.

    கடந்த 1-ந்தேதி ஆட்டோ டிரைவரும், வாலிபரும் மதுக்கடையில் மது குடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் இருவருக்கும் போதை தலைக்கேறியது. திடீரென்று இருவரும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர் அந்த வாலிபரை அருகில் உள்ள ஜோகிநாத் கோவிலுக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து வாலிபருக்கு ஆட்டோ டிரைவர் தாலி கட்டினார். பின்னர் அவர்கள் இருவரும் தங்களின் வீடுகளுக்கு திரும்பினார்கள்.

    சில நாட்கள் கழித்து ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு அந்த வாலிபர் வந்தார். ஆட்டோ டிரைவரின் பெற்றோரை சந்தித்து தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டது குறித்து கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவரின் பெற்றோர் அவரை அங்கிருந்து துரத்தினார்கள்.

    இதையடுத்து அந்த வாலிபர் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் தொடர்பாக புகார் செய்தார்.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.

    அங்கு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது அந்த வாலிபர் தனக்கு ஆட்டோ டிரைவருடன் திருமணம் ஆனதை அறிந்த எனது பெற்றோர் என்னை வீட்டில் இருந்து துரத்திவிட்டனர்.

    எனவே ஆட்டோ டிரைவர் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லாவிட்டால் தனக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார்.

    ஆனால் இரு தரப்பினரும் சேர்ந்து பேசி பிரச்னையை முடித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டதால் புகார் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.

    இதனையடுத்து, இரு குடும்பத்தாரும் தனியாக பேசி ரூ.10 ஆயிரம் பணத்தை அந்த வாலிபருக்கு கொடுத்து ஒருவருக்கொருவர் சம்மந்தம் இல்லை என எழுதி வாங்கிக் கொண்டனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!