Connect with us

    பேஸ்புக் காதலனை திருமணம் செய்ய வங்கதேசத்தில் இருந்து கங்கை நதியை நீந்தி கடந்து இந்தியா வந்த இளம்பெண்; திருமணம் முடிந்த பின் கைது செய்த போலீஸ்..!

    Bangladesh girl

    Tamil News

    பேஸ்புக் காதலனை திருமணம் செய்ய வங்கதேசத்தில் இருந்து கங்கை நதியை நீந்தி கடந்து இந்தியா வந்த இளம்பெண்; திருமணம் முடிந்த பின் கைது செய்த போலீஸ்..!

    Bangladesh girl

    வங்க தேசத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா மண்டல்.

    22 வயதாகும் இவருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஆஷிக் மண்டல் என்பவருக்கும் பேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டிருக்கிறது.

    நாட்கள் செல்லச்செல்ல இந்த நட்பு காதலாக மாறியுள்ளது.

    ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கின்றனர்.

    ஆனால், கிருஷ்ணா மண்டலிடம் பாஸ்போர்ட் இல்லாததால் அவரால் இந்தியாவிற்குள் நுழைய முடியவில்லை.

    இதனால் இருவரும் கவலையில் இருந்துள்ளனர்.

    காதலனை கரம்பிடிக்க முடியாமல் காத்திருந்த கிருஷ்ணா வங்க தேசத்திலிருந்து நீந்தியே இந்தியாவிற்கு வர முடிவெடுத்திருக்கிறார்.

    இதன்மூலம், சுந்தரவன காடுகள் வழியாக கங்கை நதியை கடந்து இந்தியாவிற்குள் வர திட்டமிட்ட கிருஷ்ணா துணிவுடன் தனது பயணத்தையும் துவங்கியுள்ளார்.

    வங்க புலிகள் அதிகம் காணப்படும் சுந்தரவன காடுகளை கடந்து, சுமார் ஒருமணி நேரம் ஆற்றில் நீந்தி இந்தியாவிற்குள் நுழைந்திருக்கிறார் கிருஷ்ணா.

    வங்க தேசத்திலிருந்து நீந்தியே இந்தியா வந்த கிருஷ்ணாவை கடந்த வாரம் கொல்கத்தாவில் உள்ள காளிகாத் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார் ஆஷிக்.

    ஆனாலும், அடுத்து வர இருக்கும் சிக்கல் குறித்து அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

    ஆவணங்கள் இல்லாமல் அத்துமீறி இந்தியாவிற்குள் நுழைந்ததாக காவல்துறையினர் தற்போது கிருஷ்ணாவை கைது செய்திருக்கின்றனர்.

    அவரை, வங்க தேச அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

    இதனால், ஆஷிக் சோகத்தில் மூழ்கியுள்ளார்.

    காதலனை கரம்பிடிக்க, வங்க தேசத்திலிருந்து இந்தியாவிற்கு நீந்தியே வந்த இளம்பெண், திருமணம் நடைபெற்ற உடனேயே காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் கொல்கத்தா முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!