Politics
அரை நி. ர்.வா.ண கோலத்தில் ஓட்டு போட வந்த வங்கி அதிகாரி; ஓடி ஒளிந்த பெண் தேர்தல் அலுவலர்கள்; எங்கு தெரியுமா??
பணி நிரந்தரம் செய்யக்கோரி நகை மதிப்பீட்டாளர் ஒருவர் உள்ளாட்சி தேர்தலில் அரை நி.ர்.வா.ண.மாக வந்து வாக்களிக்க முயன்ற சம்பவத்தால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.
காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
கடைசி ஒரு மணி நேரம் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று பதிவாகும் வாக்குகள், வரும் 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் 12வது வார்டுகான வாக்குப்பதிவு மருதுபாண்டியர் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் மகேஷ்பாபு. இவர் தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருவதுடன்.
மாநில நகைமதிப்பீட்டாளர் சங்க மாநில செயல்தலைவராக இருந்துவருகிறார்.
இவர் இன்று 12 வது வார்டிற்குட்பட்ட மருதுபாண்டியர் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்ய வந்தபோது திடீரென தனது ஆடைகளை களைந்து நகை மதிப்பீட்டாளார்களை பணி நிரந்தர படுத்த கோரிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டும் வாக்களிக்க வந்தார்.
மேலும் கொரோனா காலத்தில் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கோஷமிட்டபடி வந்து வாக்களிக்க முயன்றார்.
இதனால் அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முற்பட்டனர்.
அதனை தடுத்த அவரது ஆதரவாளர்கள் வாக்களிக்கும் உரிமையை தடுக்காதீர்கள் என கூறி காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பறக்கும்படை தாசில்தார் மைலாவதி அவரை சமாதானப்படுத்தி ஆடைகளை உடுத்த சொல்லி அவரை அழைத்து சென்று வாக்களிக்க அனுமதித்தார்.
பிறகு அதை பற்றி விசாரித்ததற்கு, தன்னை பணி நிரந்தரம் செய்யக் கோரி அரை நிர்வாணமாக வந்ததாக காரணம் கூறினார்.
ஆனாலும், மகேஸ்குமாரை அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் வாக்கு சாவடியில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகேஸ்குமார், நகை மதிப்பீட்டாளராக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறேன்.
வங்கியில் மனித உரிமை மீறல் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.
நகை மதிப்பீட்டாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த சம்பவத்தால் அந்த பூத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
