Cinema
கரூர் மாநகராட்சியில் பீஸ்ட் படம் வெளியாகாததால் ரசிகர்கள் கவலை..!
சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ளது பீஸ்ட் திரைப்படம்.
இந்த திரைப்படம் இன்று (ஏப்ரல் 13-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் உலக அளவில் திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியேட்டர்களில் வெளியாகாது என்று மாநகராட்சி தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர்.
திரையங்க உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பான பிரச்னை உள்ளது.
இதன் காரணமாக இந்த முடிவை கரூர் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் மாநகராட்சிகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது என்ற அறிவிப்பு விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
