Connect with us

    ஒரு ஓட்டில் திமுக வேட்பாளரை வீழ்த்திய பாஜக வேட்பாளர்…!

    Bjp candidate wins

    Politics

    ஒரு ஓட்டில் திமுக வேட்பாளரை வீழ்த்திய பாஜக வேட்பாளர்…!

    தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன.

    இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டது.

    இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் வாக்கு எண்ணும் மையம் அருகே திரண்டு இருந்தனர்.

    காலை 7 மணி முதல் கடுமையான சோதனைக்கு பிறகே வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    வாக்கு எண்ணும் மைய முகவர்கள் செல்போன் மற்றும் பேனா போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    சேலம் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் 16 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.

    அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலம், கோவை உள்ளிட்ட இடங்களிலும் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில் கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியின் 3-வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்ட கோபிநாத் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    Bjp candidate wins

    திமுக வேட்பாளர் சுரேஷ் 173 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், கோபிநாத் 174 வாக்குகள் பெற்றார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!