Connect with us

    தமிழகத்தில் மலர்ந்த தாமரை; நாங்க வந்துட்டோம்னு சொல்லு; ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டாக்..!!

    Bjp wins

    Politics

    தமிழகத்தில் மலர்ந்த தாமரை; நாங்க வந்துட்டோம்னு சொல்லு; ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டாக்..!!

    தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக பல இடங்களில் வெற்றி பெற்று வருவதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    Bjp wins

    தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன.

    இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.

    இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் வாக்கு எண்ணும் மையம் அருகே திரண்டு இருந்தனர்.

    காலை 7 மணி முதல் கடுமையான சோதனைக்கு பிறகே வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    வாக்கு எண்ணும் மைய முகவர்கள் செல்போன் மற்றும் பேனா போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியான திமுக உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று வருகிறது.

    மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவும், தமிழக உள்ளாட்சி தேர்தலில் தங்களது வெற்றிக்கணக்கை ஆரம்பித்துள்ளது.

    தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்று கூறியவர்கள் வியக்கும் வண்ணம் பாஜக வெற்றியை குவித்து வருகிறது.

    அந்த வகையில், திண்டுக்கல் மாநகராட்சி 1வது வார்டில் பாஜக முதல் வெற்றிக்கணக்கை தொடங்கியது.

    மதுரை மாநகராட்சி 86 வது வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி.பூமா ஜனாஸ்ரீ வெற்றி பெற்றார்.

    கிருஷ்ணகிரி நகராட்சி 10வது வார்டு பாஜக வேட்பாளர் சங்கர் வெற்றி பெற்றார்.

    அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் கூறிய நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 வார்டுகளை வென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தின் கொல்லங்கோடு நகராட்சி 1வது வார்டில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

    மேலும் அம்மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளிலும் இதுவரை 8 வார்டுகளில் பாஜக வென்றுள்ளது.

    நாகர்கோவில் மாநகராட்சி 9வது வார்டில் திருமதி.மீனா தேவ் வெற்றி பெற்றுள்ளார்

    சத்தியமங்கலம் நகராட்சி 8வது வார்டில் பாஜக ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    அதிமுகவின் கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபித்துள்ளது பாஜக.

    நோட்டா உடன் போட்டி போடும் கட்சி என்று பலரும் கிண்டலடித்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தம் 50க்கும் மேற்பட்ட வார்டுகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

    இதனால் உற்சாகம் அடைந்த பாஜக தொண்டர்கள், #நாங்க வந்துட்டோம்னு சொல்லு என்று ஹேஸ்டேக் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர் பாஜகவினர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!