Uncategorized
“இந்த உலகத்தில் வாழ எனக்கு பிடிக்கவில்லை” – கடிதம் எழுதி வைத்துவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சிறுவன்..!
இந்த உலகத்தில் வாழ எனக்கு பிடிக்கவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு சிறுவன் ஒருவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானகரம் அருகே உள்ள அடையாளம்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் சாவுன்.
இவர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது.
சாவுன் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல சாவுன் தனது மனைவியுடன் ஒரு அறையிலும், மற்றொரு அறையில் 2 மகன்களும் படுத்து தூங்கியுள்ளனர்.
இன்று காலையில் கண்விழித்த போது தனது மகன்களை தேடியுள்ளார்.
தனது இளைய மகன் ஹாருஸ் மாயமாகி இருப்பது கண்டு சாவுன் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே பக்கத்து வீடுகளில் சென்று தேடியுள்ளார். ஆனால் அவரது மகன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அதே குடியிருப்பில் உள்ள வீட்டின் பால்கனியில் சிறுவன் ஒருவன் தலை சிதறி இறந்து கிடப்பதாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சிறுவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்த சிறுவன் அதே குடியிருப்பைச் சேர்ந்த சாவுனின் மகன் ஹாருஸ் என்பது தெரிந்தது.
பின்னர் சாவுன் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அங்கு சிறுவன் ஹாருஸ் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
அதில், இந்த உலகத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொள்கிறேன்.
அப்பா, அம்மா இருவரும் உடல் நிலையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள். போலீசார் யாரும் எனது பெற்றோரை தொந்தரவு செய்ய கூடாது என்று எழுதப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
