Tamil News
“இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை” – சந்தேகப்பட்ட கணவனால், மனைவி எடுத்த விபரீத முடிவு..!!
பூந்தமல்லியை சேர்ந்த கற்பகம் (27) என்ற பெண்ணுக்கு திருமணமாகி 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கடந்த சில வருடங்களாக பெற்றோருடன் வசித்து வந்தார்.
இதற்கிடையே துணிக்கடையில் வேலை பார்த்த போது அங்கு பணிபுரிந்த அவரது தோழியின் சகோதரனான ஆகாஷ் என்பவரை காதலித்து சுமார் ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தார்.
இவர்களுக்கு அண்மையில் குழந்தையும் பிறந்த நிலையில், கற்பகம் திடீரென கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் வழக்கை முடித்தனர்.
இந்நிலையில் கற்பகத்தின் செல்போனில் சில தகவல்கள் அவரது தந்தைக்கு தெரியவந்ததையடுத்து கற்பகத்தின் தற்கொலைக்கு காரணம் அவருடன் சேர்ந்து வாழ்ந்த ஆகாஷ் தான் எனக் கூறி அவரது தந்தை பூந்தமல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் தனது மகள் கற்பகம் திருமணமாகி 9 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில் கணவரை பிரிந்து தன்னுடைய வீட்டில் வசித்து வந்தார்.
பூந்தமல்லியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்த நிலையில் அங்கு பணிபுரிந்த அவரது தோழியின் சகோதரனான ஆகாஷ்(என்ற) கவுதமை காதலித்து வந்ததாகவும் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கற்பகம் குழந்தை பெற்றெடுத்தார்.
இந்நிலையில் அந்த குழந்தை தனக்கு பிறந்ததில்லை என்று கூறி ஆகாஷ் துன்புறுத்தி வந்ததார்.
இந்த நிலையில் தனது மகளின் மீது சந்தேகம் ஏற்பட்டு சரமாரியாக தாக்கிய நிலையில், மகள் தற்கொலை செய்து கொண்டார்.
தனது மகளின் தற்கொலைக்கு காரணமான ஆகாசை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் காதலன் ஆகாஷை கைது செய்தனர்.
