World News
காதலியை பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப்பேருந்தை திருடிச் சென்ற 15 வயது சிறுவன்..!
சிறுவன் ஒருவன் தனது காதலியை பார்ப்பதற்காக அரசு பேருந்தை திருடிச் சென்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பிலியந்தலை பஸ் டிப்போவில் நேற்று முன் தினம் இரவு பஸ் ஓட்டுனர்கள் பஸ்சை நிறுத்திவிட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை பார்ப்பதற்காக டிப்போவிற்குள் சென்று இருக்கிறார்கள்.
சிலர் உணவு வாங்க சென்று இருக்கிறார்கள்.
அப்போது உணவு வாங்க சென்று விட்டு ஓட்டுனர் ஒருவர் திரும்பி வந்து பார்த்தபோது தான் நிறுத்தி வைத்திருந்த தனது பேருந்து காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
உடனே அவர் இது குறித்து பிலியந்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்.
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததில் கெஸ்பேவ – பிலியந்தலையில் இருக்கும் சோதனை சாவடியில் அந்த பேருந்து செல்வது தெரிய வந்திருக்கிறது.
உடனே போலீசார் தகவல் கொடுக்கவும் சோதனை சாவடியில் இருந்தவர்கள் அந்த பேருந்தை மடக்கி பிடித்தனர்.
அப்போது அதில் இருந்த சிறுவன் தப்பி ஓடி இருக்கிறார். அவரை விரட்டி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
விசாரணையில், தனது காதலியை பார்ப்பதற்காக புறப்பட்டு வந்தேன். இரவு 8 மணிக்கு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது எந்த பேருந்தும் இயங்கவில்லை.
இதனால் எனக்கு கோபம் ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து டெப்போவில் இருந்த ஒரு பேருந்தில் சாவி அப்படியே இருப்பதே கண்டேன்.
உடனே எப்படியாவது காதலியை பார்த்து விட வேண்டும் என்பதற்காக பேருந்தை நானே இயக்கிக் கொண்டு சென்றேன்.
காதலியை பார்த்துவிட்டு திரும்பி வரும்போது போலீசிடம் சிக்கிக் கொண்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
அந்த சிறுவனை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் மேற்கொண்டு விசாரணை நடத்திய வருகின்றனர்.
காதலியை பார்ப்பதற்காக அரசு பேருந்தை திருடி கொண்டு சென்ற சிறுவனின் செயல் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
