Connect with us

    பாம்பு போல் அடிக்கடி தோல் உரியும் 8 வயது சிறுவனின் உடல்; வேதனையில் பெற்றோர்…!!

    Skin peeling dindigul boy

    Uncategorized

    பாம்பு போல் அடிக்கடி தோல் உரியும் 8 வயது சிறுவனின் உடல்; வேதனையில் பெற்றோர்…!!

    8 வயதுடைய சிறுவனுக்கு அடிக்கடி பாம்பு போல தோல் உரியும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    Skin peeling dindigul boy

    திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகேயுள்ள தொட்டனம்பட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார்.

    தனது உறவுக்கார பெண்ணான ஜெயசித்ராவை திருமணம் செய்த பிரேம்குமார் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, திருப்பூர் கருவம்பாளையத்தில் வசித்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு கெளசல்யாதேவி (வயது 11) என்ற மகளும், பொன்குமரன் (வயது 8) என்ற மகனும் உள்ளனர்.

    பொன்குமரன் பிறக்கும்போதே தோல் நோய் பாதிப்புடன் பிறந்துள்ளான்.

    தலை முதல் கால் வரை பாம்பு தோல் போல் தோலானது உதிர்ந்துகொண்டே இருக்குமாம்.

    மேலும், உடல்சத்துக் குறைபாடு உள்ளதால், எட்டு வயதானாலும் அவன் பார்ப்பதற்கு மூன்று வயது சிறுவனுக்குரிய உடல் வளர்ச்சியுடன் உள்ளான்.

    இதனால் தனியாக வெளியில் நடமாட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளான்.

    சிறுவனின் உடல்நிலை சரியாக பெற்றோர்கள் பல மருத்துவமனையை நாடியுள்ளனர்.

    ஆனாலும், அதெல்லாம் பயனளிக்கவில்லை. ஆயுர்வேதம் சித்த மருத்துவம் என எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை

    மேலும், பொன்குமரனின் இந்த நோய்க்கு என்ன காரணம் சிறுவனின் பெற்றோர்கள் தெரிவிக்கும் காரணம் அதிர்ச்சியை தருகிறது.

    பிரேம்குமாரின் மனைவி கர்ப்பமாக இருந்த நேரத்தில், வீட்டுக்கு முன்பு இரு பாம்புகள் நடனமாடியதாகவும், பக்கத்துவீட்டு பெண் முறத்தால் அடித்ததால் காயம் பட்டு வீட்டு வாசலில் வந்து இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பாம்புவின் ஆன்மா கொடுத்த சாபத்தால் தான் தனது மகன் பொன்குமரனுக்கு இவ்வாறு நேர்ந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    பல கோயில்களுக்கு சென்று வந்தும் பல வைத்திய முறைகளை பின்பற்றியும் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் பார்த்தும் இன்னும் குணமடையவில்லை வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    தங்கள் மகன் பொன்குமரனுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என இத்தம்பதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!