Connect with us

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு..!!

    Boy rescued

    Viral News

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு..!!

    சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டான்.

    Boy rescued

    சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி – ஷம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல் சாஹு.

    கடந்த கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் ராகுல் தவறி விழுந்தான்.

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் கதறி அழுதிருக்கிறான்.

    சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் ஓடிவந்து தேடியிருக்கிறார்கள்.

    எங்கேயும் காணாமல் போகவே, சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடியிருக்கிறார்கள்.

    அப்போதுதான் ராகுல் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி இருப்பது தெரிய வந்தது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும்  தகவல் தெரிவித்தனர்

    அதன்பின்னர் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது

    இது குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது

    ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் சுரங்கம் தோண்டும் பணி நடந்தது.

    பின்னர் அந்த சுரங்கம் வழியே சிறுவன் சிக்கி இருந்த இடத்திற்கு டிரில் மிஷன் மூலம் துளை போட்டு மீட்பு படையினர் சென்றனர்.

    தீவிரமாக நடந்த இந்த மீட்பு பணி 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்தது.

    இந்த நிலையில் 100 மணி நேரத்துக்கும் மேலான மீட்பு முயற்சிக்கு பின் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.

    இது குறித்து சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    அனைவரின் பிரார்த்தனையாலும், மீட்புக் குழுவினரின் இடைவிடாத அர்ப்பணிப்பு முயற்சியாலும், ராகுல் சாஹு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

    அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என தெரிவித்துள்ளார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!