Connect with us

    ஓடும் ரயில் முன் நின்று ரீல்ஸ் எடுக்க முயன்ற பள்ளி மாணவர் ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராட்டம்..!

    Train accident

    Viral News

    ஓடும் ரயில் முன் நின்று ரீல்ஸ் எடுக்க முயன்ற பள்ளி மாணவர் ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராட்டம்..!

    தெலுங்கானாவில் ஓடும் ரெயில் முன் சென்று ரீல் வீடியோ எடுக்க முயன்ற மாணவர் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Train accident

    தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் அக்‌ஷய் ராஜ் ( 17 ).

    இவர் பிளஸ் 2 படித்து வருகிறார்.

    சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள இவருக்கு ஓடும் ரெயில் முன் நின்று ரீல்ஸ் எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.

    அருகே நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீ வீடியோ எடுக்க முயன்று உள்ளார்.

    ஆனால் வேகமாக சென்ற ரெயில் அவர் தலை மீது மோதியது.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தில் அக்‌ஷய் இரத்தத்துடன் இருப்பதைக் கவனித்தார்.

    உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அகஷய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அக்‌ஷய் பின்னர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    அக்‌ஷய் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

    காசிப்பேட்டை ரெயில்வே போலீசார் கூறுகையில், “அக்‌ஷய் தனது இரண்டு நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் வீடியோ எடுக்க பல்ஹர்ஷாவில் இருந்து வாரங்கல் செல்லும் ரெயில் செல்லும் பாதையில் நின்று உள்ளார்.

    அப்போது வேகமாக சென்ற ரெயில் தலையில் மோதி உள்ளது.

    இதில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்” என தெரிவித்தனர்.

    இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!