World News
ஒரே நேரத்தில் 9 பெண்களை திருமணம் செய்த இளைஞர்; திடீரென எடுத்த சூப்பர் முடிவு; கொண்டாடி தீர்க்கும் மனைவிகள்..!
ஒரே நேரத்தில் 9 பெண்களை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய பிரபல பிரேசிலியன் மாடல் ஆர்தர் உர்சோ (Arthur O Urso), தனது மனைவிகளுடன் வாழ 7500 சதுர அடியில் அரண்மனையை கட்டி வருகிறார்.
பிரபல பிரேசிலியன் ஆண் மாடலான ஆர்தர் உர்சோ 2021 ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் 9 பெண்களை திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இருப்பினும், பின்னர் ஆர்தரின் மனைவிகளில் ஒருவர் அவரை விவாகரத்து செய்தார்.
ஏனெனில் அவர் தனது கணவரை வேறு எந்த பெண்ணுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.
இருப்பினும், ஆர்தர் ஓ உர்சோவின் இந்த திருமணங்கள் அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகாது, இது சட்டப்பூர்வமான திருமணம் இல்லை.
ஏனெனில் பிரேசிலில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வது சட்டத்திற்கு எதிரானது.
ஆனால், ஆர்தர் தனது வாழ்க்கையில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார், அவருடைய மனைவிகளும் அவருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஆனால், உர்சோவின் வாழ்க்கை முறை காரணமாக, பலரும் அவர் மீது அதிருப்தியிலும், கோபத்திலும் உள்ளனர்.
அவர் வீட்டு சுவர்களில் ‘அரக்கக் குடும்பமே, போங்கள், நாங்கள் உங்களை வரவேற்க மாட்டோம்’ என்று எழுதப்பட்டிருந்தது.
இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ஆர்தர், சுவரில் எழுதப்பட்ட விஷயம் ஏமாற்றமாக இருந்ததாகவும், எங்களுக்கு அமைதி தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது 8 மனைவிகளுடன் வசிப்பதற்காக, சுமார் 7500 சதுர அடியில், ஒரு ஆடம்பர அரண்மனை ஒன்றையும் ஆர்தர் உர்சோ கட்டி வரும் தகவல், பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது.
இதற்கு ‘Mansion of Free Love’ என பெயரும் இடப்பட்டுள்ள நிலையில், இதற்கான பணிகளும் தற்போது மும்முரமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஒரு பக்கம் புதிய வீட்டின் வேலை, மறுபக்கம் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு என இருந்தாலும், தனது மனைவிகளுடன் அட்டவணை போட்டு நேரத்தை செலவிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இத்தனை மனைவிகளுடன் வாழ்வது கடினமான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் ஆர்தர் உர்சோ, அடிக்கடி தனது 8 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
