World News
9 பெண்களை மணந்து ஒரே வீட்டில் உல்லாசமாக வாழ்ந்து வந்த இளைஞருக்கு; ஷாக் கொடுத்த 5-வது மனைவி..!
பிரேசில் நாட்டை சேர்ந்த ஆண் மாடல் ஆர்தர் உர்ஸோ (Arthur Urso). இவர் 9 பெண்களை திருமணம் செய்து கொண்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
இப்போது ஆர்தர் உர்ஸோவின் மனைவிகளில் ஒருவர் அவரிடம் இருந்து விவாகரத்து கோரியிருக்கிறார்.
ஆம் அவர் ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்ட பெண் தான் இத்தகைய முடிவை எடுத்துள்ளாராம்.
இதுகுறித்து ‘ஜாம் பிரஸ்’ என்ற ஊடகத்திற்கு ஆர்தர் உர்ஸோ பேட்டி அளித்தபோது, இந்த முடிவு தனக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆர்தர் உர்ஸோவிடம் தற்போது விவாகரத்து கோரியிருக்கும் மனைவியின் பெயர் அகதா ஆகும்.
இவர் தற்போது ஒரு தார மணவாழ்க்கையே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும், பலதார வாழ்க்கை என்பது இனியும் கவர்ச்சி மிகுந்ததாக இல்லை என்று முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆர்தர் உர்ஸோ கூறுகையில், “அகதாவுக்கு நான் மட்டுமே எல்லாம் என்றிருக்க வேண்டும் என நினைக்கிறார்.
பலதார மண வாழ்க்கையில் உள்ள மகிழ்ச்சியை அவர் இதன் மூலமாக இழக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்தர் உர்ஸோவிடம் இருந்து அகதா என்ற மனைவி மட்டுமே விவாகரத்து கோரியுள்ள நிலையில், அவரது மற்ற 8 மனைவிகள் ஒற்றுமையாகவே இருக்கின்றனர்.
குறிப்பாக, அகதாவின் எண்ணப்போக்கு தவறானது என்றும், பலதார மணத்தில் இருக்கும் உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியை உணராமல் வெறுமனே சாகச உணர்வுக்காக திருமணம் செய்திருப்பதாகவும் மற்ற மனைவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
முதன் முதலில் லூயானா கஸாகி என்ற பெண்ணை மட்டுமே ஆர்தர் உர்ஸோ திருமணம் செய்திருந்தார்.
இந்த லூயானா கஸாகியும் கொஞ்சம் கில்லாடியான நபர் தான். அதாவது, பலருடன் உறவில் இருக்கும் open relationship வாழ்க்கை முறை மீது அதீத நாட்டம் கொண்டவர் இவர்.
ஆர்தர் உர்ஸோவின் எண்ணப்போக்கும் அதுதான் என்ற நிலையில், ‘ஜாடிக்கு ஏற்ற மூடி’ என்ற வகையில் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், ‘சுதந்திரமான காதல் உணர்வு’ என்பதை அனுபவிக்கும் நோக்கிலும், ஒருதார மண வாழ்க்கையை எதிர்க்கும் நோக்கிலும் கடந்த 2021ஆம் ஆண்டில் அடுத்தடுத்து 8 பெண்களை திருமணம் செய்தார் ஆர்தர் உர்ஸோ.
மொத்தமாக 9 மனைவிகள் என்றதுமே, குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கக் கூடும் என்ற யூகத்தை பொய்யாக்கும் வகையில் இருக்கிறது ஆர்தர் உர்ஸோவின் வாழ்க்கை.
முதல் மனைவி லூயானா கஸாகியுடன் மட்டும் ஒரு பெண் குழந்தை இருக்கிறதாம்.
அதேசமயம், மற்ற மனைவி அனைவரிடமும் தலா ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கிறது
