Connect with us

    தாலி கட்ட மறுத்து ஓடிய மணமகன்; துரத்தி பிடித்து திருமணம் செய்ய கெஞ்சிய மணமகள்; வைரலாகும் வீடியோ..!!

    Bride chasing bridegroom

    Viral News

    தாலி கட்ட மறுத்து ஓடிய மணமகன்; துரத்தி பிடித்து திருமணம் செய்ய கெஞ்சிய மணமகள்; வைரலாகும் வீடியோ..!!

    பீகாரின் நவாடாவில் ஒரு மணப்பெண் மணமகன் ஒருவரை நடுரோட்டில் திரைப்பட பாணியில் துரத்தி தன்னை திருமணம் செய்து கொள்ள கெஞ்சிய வீடியோ வைரலாகி வருகிறது.

    Bride chasing bridegroom

    நவாடாவில் உள்ள பகத் சிங் சௌக்கில், சந்தையில் மாப்பிள்ளையைக் கண்டதும் அந்தப் பெண்மணி அவரைப் பின்தொடர்ந்து ஓடிய சம்பவம் பதிவாகியுள்ளது.

    இதற்கிடையில் மணமகன் தப்பிக்க முயல்வதையும் வீடியோவில் தெளிவாக பார்க்க முடிகின்றது.

    ஆனால், அந்த பெண் பிடிவாதமாக இருக்கிறார். மணமகனை தனக்கு பிடிக்கும் என அந்த பெண் அவரிடம் கெஞ்சுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

    ஊடக அறிக்கையின்படி, பெண்ணின் குடும்பத்தினர் அந்த திருமணம் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினர்.

    மணமகனின் குடும்பத்துக்கு ஒரு பைக் மற்றும் 50,000 ரூபாயும் வரதட்சணையாக வழங்கப்பட்டது.

    ஆனால், மணமகன் சாக்கு சொல்லி திருமணத்தை தாமதப்படுத்தினார்.

    ஆகையால், மணமகள் அந்த நபரைப் பார்த்ததும், அவரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    இதனால், குடும்ப விவகாரம் சாலைக்கு வந்தது. மணமகள் மணமகனை துரத்திச் சென்றது, சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இறுதியில், இந்த விஷயத்தில் போலீசார் தலையிட வேண்டியிருந்தது.

    இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஆலோசனை நடத்திய போலீஸார், மாப்பிள்ளை வீட்டாருக்கு பேசி புரிய வைத்தனர்.

    பின்னர், மணமகன் வீட்டார் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர். இறுதியாக அந்த பெண்ணுக்கும், ஆணுக்கும் காவல் நிலையத்தை அடுத்துள்ள கோவிலில் திருமணம் நடந்தது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மாப்பிள்ளையிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் கெஞ்சுவது வருத்தமாக இருந்தாலும், இறுதியில் எல்லாம் நன்றாக முடிந்ததால் நிம்மதி கிடைக்கிறது.

    இந்த வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் உள்ளது. இந்த வீடியோவுக்கு பல வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் பலர் பலவிதமான கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!