Connect with us

    “அந்த பெண் கவர்ச்சியாக இல்லை; அவ வேண்டாம் உனக்கு” – அம்மா சொன்னதற்காக மணமேடை வரை வந்தபின் மணமகளை உதறிய இளைஞர்..!

    Tunisia woman marriage

    World News

    “அந்த பெண் கவர்ச்சியாக இல்லை; அவ வேண்டாம் உனக்கு” – அம்மா சொன்னதற்காக மணமேடை வரை வந்தபின் மணமகளை உதறிய இளைஞர்..!

    துனிசியா நாட்டைச் சேர்ந்த ஒரு நபர், தனது தாய் சொன்ன ஒரு வார்த்தையால் மணமேடைவரை வந்த பிறகு திடீரென மணமகளைக் கைவிட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Tunisia woman marriage

    ஆம், பெயர் வெளியிடப்படாத அந்த நபர், தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறி, அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தாய்க்கு அனுப்பிவைத்துள்ளார்.

    திருமண ஏற்பாடுகள் நடக்க, திருமண நாளன்று திருமண உடையில் நடந்துவரும்போதுதான் தனது வருங்கால மருமகளை முதன்முறையாகப் பார்த்திருக்கிறார் மணமகனின் தாய்.

    உடனே அவர் தன் மகனிடம், அந்தப் பெண் கவர்ச்சியாக இல்லை, அவள் குள்ளமாக இருக்கிறாள் என்றும், அவளைத் திருமணம் செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார்.

    அவரது மகனும் உடனே தலையாட்டிக்கொண்டு மணமகளை வேண்டாம் என மணமேடையிலேயே சொல்லி விட்டார்.

    இதனால், அவமானத்தால் கூனிக்குறுகிப்போன அந்தப் பெண் பிறகு சமூக ஊடகம் ஒன்றில் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

    அந்தப் பெண்ணின் பெயர் Lamia Al-Labawi.

    திருமண மேடை வரை வந்து தன் திருமணம் நின்றுபோனதால், தன்னைக் காண்பவர்கள் எல்லாம் தன்னைப் பற்றி இரகசியமாக புறம் பேசுவதாகவும், தான் அவமானமாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

    அத்துடன், தனக்கு யாரும் இல்லை என்றும், தானே தன் திருமணத்துக்கு பணம் செலவு செய்ததாகவும், தற்போது திருமணம் நின்றுபோனதால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் Lamiaவுக்கு ஆறுதல் கூறிவரும் பலர், அந்த நபரை திருமணம் செய்யாததே நல்லது என்று அறிவுரை கூறியுள்ளனர்.

    மேலும், இப்படி அந்த நபர் அம்மா பிள்ளையாக தலையாட்டுவாரானால், நீங்கள் இழந்தது ஒரு ஆணையே அல்ல என்றும், அதனால் இழந்ததை எண்ணிக் கவலைப்படவேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!