Connect with us

    தாலி கழுத்தில் ஏறியதும் காதலனோடு தப்பியோடிய மணமகள்; முதலிரவு கனவில் உற்சாகமாக இருந்த மணமகனுக்கு ஏற்பட்ட சோகம்..!!

    Bride groom escape

    Tamil News

    தாலி கழுத்தில் ஏறியதும் காதலனோடு தப்பியோடிய மணமகள்; முதலிரவு கனவில் உற்சாகமாக இருந்த மணமகனுக்கு ஏற்பட்ட சோகம்..!!

    வேலூர் அருகே தாலி கட்டிய சில மணி நேரத்துக்குள் மணப்பெண் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Bride escape with boy friend

    வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில், அந்த பெண்ணுக்கும் அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவர்கள் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

    இவர்களின் காதல் விவகாரம், இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது.

    ஆனால் அவர்கள் இருவருக்கும் உறவு முறை சரியில்லை என்பதால் பெற்றோர்கள் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்வதற்கு முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

    கடந்த 14–ந் தேதி காலை நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் இளம் பெண்ணுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

    இந்நிலையில் தனது காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார் அந்த பெண்.

    திருமணம் முடிந்து மணமக்கள் பெண் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

    அப்போது யாருக்கும் தெரியாமல் மணப்பெண் தப்பியோடி உள்ளார்.

    மணப்பெண் ஓடியதை அறிந்து  அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணப்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடியும்,  அவர் கிடைக்கவில்லை என்று தெரிகின்றது.

    பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மணப்பெண்ணை தேடி வருகின்றனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!