Tamil News
அடக்கொடுமையே! முதலிரவு முடிந்த மறுநாள் மணமகன் எடுத்த விபரீத முடிவு; கதறி அழுத மணப்பெண்..!
திருமணமான மறுநாள் மணமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் பகுதியில் உள்ள மனக்கொடியில் வசித்து வருபவர் சிவசங்கரன் மகன் தீரஜ் (37).
இவருக்கும் திருச்சூர் மாவட்டம் மாரோட்டியில் வசித்து வரும் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில் இவர்களின் திருமணம் கடந்த திங்கட்கிழமை 10 மணி அளவில் நடைபெற்றது.
இந்த நிலையில் திருமணத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் சில கைகலப்புகள் நடந்துள்ளது.
இதனால் திரஜ் மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சேர்வா பகுதியில் உள்ள காயலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் வலையில் திரஜின் இறந்த உடல் சிக்கியுள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் ஒல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதனை அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து உடலை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கைகலப்பு சம்பவம் திரஜை மிகவும் வெகுவாக பாதித்தது.
இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் இது மட்டுமே காரணமா அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான மறுநாளே மணமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
