Viral News
மதம் மாறி காதல் திருமணம் செய்த மகள்; ஆத்திரத்தில் மணமகனை வெட்டிக் கொன்ற பெண் வீட்டார்..!
ஐதராபாத்தில் மதம் மாறி காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ராஜேந்தர் பன்வாருடன் மகன் நீரஜ் குமார்(21).
இவர் பேகம் பஜார் பகுதியில் நிலக்கடலை வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா(20) என்ற பெண்ணை நீரஜ் குமார் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
மகள் மதம் மாறி திருமணம் செய்த கொண்டதால் நீரஜ் குமார் மீது பெண் வீட்டார் கொலைவேறியில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீரஜை தீவிர கண்காணித்து வந்தார்.
கடந்த வெள்ளியன்று கடையை மூடிவிட்டு தனது தந்தையுடன் நீரஜ் குமார் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, வழிமறித்த கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அனைத்தும் அவரது தந்தையின் கண்முன்னே நடந்தது.
இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
