Viral News
“ஹைய்யா ஜாலி ஜாலி”- தாலி கட்டும்போது மகிழ்ச்சியில் கைத்தட்டி துள்ளிக் குதித்த மணப்பெண்..!
ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் மிக முக்கியமான நாளாக அமைகிறது.
அப்படிப்பட்ட நாள் நன்கு மறக்க முடியாத நினைவுகளாக அமைய வேண்டும் என மணமக்கள் நினைப்பதுண்டு.
அந்த வகையில், தற்போது மணப்பெண் ஒருவர் தனது திருமண நாளை இன்னும் அழகாக்க, தாலி கட்டும் நேரத்தில் செய்த விஷயம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் ஒரு பகுதியில் இந்த திருமணம் நடந்துள்ள நிலையில், மாப்பிள்ளை தாலியை எடுத்துக் கொண்டு மணமகளின் கழுத்திற்கு அருகே சென்றதும் குழந்தை போலவே உற்சாகம் அடைந்து விடுகிறார் அந்த பெண்.
ஹைய்யா ஜாலி ஜாலி என தாலி கட்டும்போது மகிழ்ச்சியில் கைத்தட்டி துள்ளிக் குதிக்கிறார் மணப்பெண்.
அது மட்டுமில்லாமல், அங்கிருந்த நண்பர்கள் அனைவரும் கத்தி கூச்சல் போட்டு திருமணத்தை கொண்டாட, மறுபக்கம் கல்யாண பொண்ணும் தனக்கு திருமணம் ஆனதால் கத்திய படியே, கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து நண்பர்கள் கத்திக் கொண்டே திருமணத்தை கொண்டாடிய படி இருக்க, மாப்பிள்ளை தாலி கட்டி முடிப்பது வரை மணப்பெண்ணின் முகத்தில் ஆனந்தம் மட்டும் தான் நிரம்பி இருந்ததை காண முடிந்தது.
இறுதியில், தாலி கட்டி முடித்த பின், தனது கணவரை கட்டியணைத்த படி முத்தமும் கொடுக்கிறார் மணப்பெண்.
தனக்கு திருமணமான சமயத்தில், குழந்தை போல மாறி, கைதட்டி கொண்டாடிய மணப்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
