Tamil News
“சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் உங்க கணவரை எங்க கூட அனுப்பி வைக்கணும்” – மணமகளிடம் பத்திரத்தில் எழுதி கையெழுத்து வாங்கிய மணமகன் நண்பர்கள்…!
திருமணம் என்றாலே வரவர பல்வேறு விதமான வினோதமான சம்பவங்கள் நடைபெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் திருமண மேடையில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் உங்க கணவரை எங்க கூட விளையாட அனுப்பி வைக்கணும் என்ற நிபந்தனை விதித்து மணமகளிடம் பத்திரத்தில் எழுதி கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள் செயல் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத்.
தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றும், இவர் கிரிக்கெட் விளையாடுவதிலும் கெட்டிக்காரர் என கூறப்படுகிறது.
இவரது, ‘சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணி’-ன் கேப்டனாகவும் உள்ளார்.
இந்நிலையில், தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் ஹரி பிரசாத்திற்கும் நேற்று (செப். 9) உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தின் போது, பத்திரத்துடன் வந்த மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணிடம் திருமணத்திற்கு பின்னரும் ஹரி பிரசாத்தை கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மணமகன் ஹரி பிரசாத்தை கிரிக்கெட் விளையாட, மணமகள் சம்மதம் தெரிவிப்பது போன்று ஒப்பந்த பத்தரத்தில் கையெழுத்திட வைத்து திருமண விழாவையே அதிர வைத்தனர்.
திருமணத்திற்கு பின்னர் மணமகன் விளையாட்டுகளில் கலந்து கொள்ள மனைவிமார்கள் ஒரு சில சமயம் தடுக்கும் சூழலில், மணமகன் நண்பர்களின் இந்த ஒப்பந்த பத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
