Viral News
நல்லா சரக்கடிச்சுட்டு, ஃபுல் மப்புல திருமண மேடைக்கு வந்த மணமகன்; அதிர்ச்சியில் மணமகள் நிகழ்த்திய தரமான சம்பவம்..!
திருமண விழாவில் குடித்து விட்டு மணமகன் நடமாடியதால், அதிர்ச்சியில் மணமகள் அதே நாளில் அதே முகூர்த்தத்தில் வேறு ஒரு இளைஞரை மணந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் செரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் மகாவீர் வயது.27.
இவருக்கும் செலனா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டில் இருந்து மணமகளின் கிராமத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது மணமகனை வரவேற்பதற்காக இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.
மணமகனும் அவரது நண்பர்களும் நன்றாக குடித்து விட்டு, ஃபுல் மப்புல நடனமாடி இருக்கிறார்கள்.
இதனால், மணமகள் வீட்டார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் குறித்த நேரத்தில் நடக்க வேண்டியிருந்த திருமண வரவேற்பு விழா தடைபட்டது.
இதனால் மணமகளின் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
மேலும், மணமகளும் குடித்து விட்டு நடனமாடியதால் சுனிலை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
இதையடுத்து, திருமணத்திற்காகக் குறித்த நேரத்தில் தனது மகளுக்கு வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர் மணமகளின் பெற்றோர்.
இதனை அறிந்து மணமகன் குடும்பத்தினர் தகராறு செய்துள்ளனர்.
பின்னர், இது குறித்து மணமகனின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
