Connect with us

    தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்தது போல நடித்து திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; எதற்காக தெரியுமா..??

    Wedding

    Tamil News

    தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்தது போல நடித்து திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; எதற்காக தெரியுமா..??

    தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்தது போல நடித்து மணமகளே திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

    Wedding

    சென்னை பாடி அவ்வை நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது 35).

    இவருக்கும், தாம்பரம் பெரியார் நகரை சேர்ந்த 31 வயது பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    நேற்று முன்தினம் காலை வண்ணாரப்பேட்டையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் இவர்களின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென மணமகள் மயங்கி விழுந்தார்.

    அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவருக்கு உடல் நிலை சரிஇல்லை என கருதி அருகில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடல்நலப் பிரச்சனை எதுவுமில்லை என கூறியுள்ளார்.

    பின்னர் விசாரித்த பார்த்த போதுதான், தான் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இந்த திருமணம் பிடிக்காததால் மயக்கம்போட்டு விழுந்ததாகவும் மணமகள் கூறியுள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகன் தினகரன், திருமணத்திற்காகச் செலவு செய்யப்பட்ட பணத்தைப் பெண் வீட்டார் திருப்பி கொடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலிஸார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    இதில் திருமணத்திற்காக செலவு செய்யப்பட்ட பணத்தைக் கொடுப்பதாகப் பெண் வீட்டார் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!