Tamil News
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால்; 50% விலையில் பிரியாணி; அதிரடி ஆஃபரை அறிவித்த கடைக்காரர்…!!
கோவையில் தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்த பிரியாணி கடை உரிமையாளர் ஒருவர் 50% ஆஃபரை அறிவித்துள்ளார்.
உலகமெங்கும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு நாடுகளில் மிகுந்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
முதல் அலை, இரண்டாம் அலை முடிந்து தற்போது மூன்றாம் அலை உருவாகவிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிகக் கடுமையாக கடந்த காலங்களில் காணப்பட்டது.
இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுக்க கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
தமிழகத்திலும் அரசும், தனிநபர்களும் சமூகநல அக்கறையோடு தடுப்பூசி குறித்தான விழிப்புணர்வை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை சாய்பாபா காலனியில் 15 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற மாமு பிரியானி கடை தடுப்பூசி செலுத்த கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரியாணி ஆஃபரை அறிவித்துள்ளது.
இந்த கடையின் உரிமையாளர் தனது கடையில் இரண்டு தவனை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு அனைத்து உணவு வகைகளிலும் 50% ஆஃபரை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதனை ஊக்கப்படுத்த இந்த பிரியானி கடையில் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு உணவகங்களில் விற்க்கப்படுகின்ற பிரியானி , சில்லி சிக்கன் , குஸ்கா உள்ளிட்ட உணவுகளில் 50% ஆஃப்ர் தரப்பட்டடிருக்கின்றன.
120 ரூபாய் பிரியாணி 60 ரூபாய்க்கும், 120 ரூபாய் பெப்பர் சிக்கன் 60 ரூபாய்க்கும் , 60 ரூபாய் லெக் பீஸ் 30 ரூபாயென விலை நிர்ணயம் செய்துள்ளனர்.
மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவே இந்த ஆஃபர் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கொடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதனால் அப்பகுதி மக்களில் சிலர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுவிட்டு பிரியாணி வாங்கிச் செல்கின்றனர்.
