Connect with us

  “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” – சுந்தரியின் அழகில் மயங்கி; பண்ணை வீட்டில் உல்லாசம் அனுபவித்த தொழிலதிபருக்கு நேர்ந்த துயரம்; அதிர்ச்சியில் திருச்சி மாநகரம்..!!

  Tricky sundari

  Tamil News

  “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” – சுந்தரியின் அழகில் மயங்கி; பண்ணை வீட்டில் உல்லாசம் அனுபவித்த தொழிலதிபருக்கு நேர்ந்த துயரம்; அதிர்ச்சியில் திருச்சி மாநகரம்..!!

  திருச்சி தில்லைநகரை சேர்ந்தவர் ஜோசப் வல்லவராஜ் (50). தொழிலதிபரான இவர், மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

  இவரது நண்பர் சென்னையை தாமஸ் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு, கல்லணை செல்லும் பாதையில், சாய் பாபா கோயில் எதிரே உள்ளது.

  காவிரிக்கரையோரம் உள்ள அந்த பண்ணை வீட்டை, கோழி, முயல், வாத்துகள் வளர்த்து, ஜோசப் பராமரித்து வருகிறார்.

  பெண்கள் விஷயத்தில் வீக்கான ஜோசப் வல்லவராஜூக்கும், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத் தெருவை சேர்ந்த சுந்தரி (வயது 40) என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

  இரவு நேரங்களில் காவிரிக்கரையில் சல்லாபம் ஆற்றில் குளியல் என, இவர்களது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எல்லாம், இந்த பண்ணை வீட்டில் தான் அரங்கேறியுள்ளது.

  Tricky sundari

  சுந்தரியிடம் பணத்தை வாரி இறைத்த ஜோசப், ‘தனக்கு வேறு பெண்கள் வேண்டும்’ என்று சுந்தரியிடம் கேட்டிருக்கிறார்.

  அதையடுத்து, சுந்தரி தனது வீட்டின் அருகே வசிக்கும், பியூட்டி பார்லரில் வேலை பார்க்கும் கல்பனாவை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

  அதைத்தொடர்ந்து, சுந்தரி வீட்டின் அருகே உள்ள, 18 வயது இளம் பெண்ணையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

  சம்பவத்தன்று இரவு பண்ணை வீட்டில் மூவருடனும் ஒரே நேரத்தில் உல்லாசமாக இருந்துள்ளார் ஜோசப்.

  அப்போது திபுதிபுவென உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், மூன்று பெண்களுடன் ஜோசப் ‘கிடந்த கோலத்தை’ முழுமையாக மொபைல் போனில் படம் எடுத்துள்ளனர்.

  ஜோசப்பை சரமாரியாக தாக்கி, அவரது காரிலேயே அவரை ஏற்றிக் கொண்டு லால்குடிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள தோப்பில் வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

  முதலில் ஒரு கோடியில் பேரம் ஆரம்பித்து, இறுதியாக, 10 லட்சத்தில் முடிந்துள்ளது. ஒரு லட்ச ரூபாயை ‘ஜி பே’ மூலம் ஜோசப் முன்தொகையாக கொடுத்துள்ளார்.

  மீதித்தொகையை எங்கே? எப்போது? கொடுப்பது என்ற டீலிங் பேசி முடிக்கப்பட்டது. அதன்பிறகு, ஜோசப்பை பத்திரமாக அழைத்துச் சென்று வீட்டில் விடுவதற்காக கடத்தல் கும்பல் அவரை காரில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர்.

  லால்குடி அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் இக்கும்பல் சிக்கியது.

  இச்சம்பவத்தில், திருச்சி ராஜா (27), திருவெறும்பூர் வடக்கு காட்டூர் நடுபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சபரி( 28), லால்குடி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சசிகுமார்(20),லால்குடி சாத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் (30), லால்குடி தெற்கு தெருவை சேர்ந்த கவின்குமார் (21) ஆகிய, 5 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.

  இவர்கள் அனைவரும், ஏற்கனவே, வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவ செய்யப்பட்டு, தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட திருச்சி காட்டூரை சேர்ந்த தமிழ், அவரது கூட்டாளி ஸ்ரீநாத், சுந்தரி மற்றும் கல்பனா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  சுந்தரிக்கும், ரவுடி தமிழுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்திருக்கிறது.

  சுந்தரியின் காம வலையில் சிக்கும் பெரும் புள்ளிகளிடம் இருந்து, ரவுடி தமிழுடன் சேர்ந்து பணம் பறிப்பதையே சுந்தரி வாடிக்கையாக வைத்திருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

   

  Continue Reading
  To Top
  error: Content is protected !!